/* */

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

HIGHLIGHTS

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி
X

Coimbatore News Today - கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer-Rs.27,804/-) மற்றும் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator Rs.13,240/-) ஆகிய பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer) பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தவராகவும் பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு/ அரசு சாரா நிறுவனம்/ சட்டம் சார்ந்த இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும்.

மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior Level) முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 15.03.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் - 641 018. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Updated On: 14 March 2023 2:14 PM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...