எஸ்.பி.வேலுமணி உறவினர் வீட்டில் சோதனை நிறைவு

எஸ்.பி.வேலுமணி உறவினர் வீட்டில் சோதனை நிறைவு
X

எஸ்.பி.வேலுமணி இல்லம்

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

810 கோடி ரூபாய் ஊழல் புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஓரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை மதுக்கரை பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் உறவினரான சண்முகராஜா வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது. 7 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!