கோவையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை வன ஊழியரை தாக்கும் வீடியோ வைரல்..!

கோவையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை வன ஊழியரை தாக்கும் வீடியோ வைரல்..!
X

குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை, வன ஊழியரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சி. 

Wild Elephant Attack Videos -கோவையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை, வன ஊழியரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Wild Elephant Attack Videos - கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே தீத்திபாளையம் பகுதியில் குடியிருப்புகள், வயல்கள் உள்ளன. இந்த பகுதி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடர்ந்த மரங்களுடன் காட்சியளிக்கிறது. இப்பகுதியில்தான் பக்தர்கள் மலைகள் பல தாண்டி சென்று வழிபடும் வெள்ளிங்கிரி மலைப்பகுதி, கோவை குற்றாலம் ஈஷா யோகா மையம், காருண்யா கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.

கோவையில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் வழியில் தீத்திபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கு உள்ள நபரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

உடனடியாக, அருகில் இருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் கூச்சலிட்டும் அவரை மீட்டனர். சரியான நேரத்தில் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டதால் உயிர்சேதம் ஆகவில்லை. இருந்தபோதிலும் காயமடைந்த நிலையில் அந்த நபரை மீட்டு கோவை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், யானை தாக்க்குதலுக்கு உள்ளானது, மதுக்கரை வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு வீரர் நாகராஜ் என்பது தெரியவந்தது.

வேட்டை தடுப்பு வீரராக வனத்துறையில் பணிபுரியும் ஊழியரே யானையின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியினர் இடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்