கோவை ஊரகப் பகுதிகளில் இன்று 5 மையங்களில் தடுப்பூசி முகாம்

கோவை ஊரகப் பகுதிகளில் இன்று 5 மையங்களில் தடுப்பூசி முகாம்
X

தடுப்பூசி போட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கோவை ஊரகப் பகுதிகளில் இன்று 5 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும் தினசரி தொற்று பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பிரசவித்த தாய்மார்களுக்கு சிறப்பு முகாம்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்காக ஆயிரத்து 390 கோவாக்சின் தடுப்பூசிகளும், 1900 கோவி ஷீல்ட் தடுப்பூசிகளும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,

ஊரகப் பகுதிகளில் சூலூர் அரசு மருத்துவமனை, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி, மதுக்கரை அரசு பள்ளி, தொண்டாமுத்தூர் - காலம்பாளையம் அரசு பள்ளி 5 இடங்களில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்காக 390 கோவாக்ஸின் தடுப்பூசிகளும்,1900 கோவி ஷீல்ட் தடுப்பூசிகளும் தடுப்பூசி மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் மதுக்கரை அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி