திருக்குறள் ஆதி பகவனும், ரிக் வேத பரமாத்மாவும் ஒன்று தான் - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் குறள் மலை சங்கம் சார்பில் உலக திருக்குறள் மாநாடு இன்று துவங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குத்து விளக்கு ஏற்றி உலக திருக்குறள் மாநாட்டை துவக்கி வைத்தார். பின்னர் கல்வெட்டில் திருக்குறள் என்ற நூலை ஆளுநர் வெளியிட்டார். இதனை தொடர்ந்து 10 மாணவர்களுக்கு சிறந்த தமிழ் மாணாக்கர் சான்றிதழ்களையும், தமிழ் சான்றோர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
இதனைதொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ரவி, தமிழகம் புண்ணிய பூமி, ஆன்மீக பூமி என தெரிவித்தார். இங்கு சிறந்த மனிதர்கள் இருந்துள்ளார்கள் எனவும், இந்த மண்ணில் திருவள்ளுவர், விவேகானந்தர், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உசி , சிதம்பரம் பிள்ளை , மகாகவி பாராதி ஆகியோர் ஆன்மீகம் மூலம் இளைஞர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி உள்ளனர் என தெரிவித்தார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற முதல் குறளில் வரும்ஆதி பகவனும், ரிக் வேத்தில் வரும் பரமாத்மாவும் ஓன்றுதான் என கூறிய அவர், திருக்குறள் ஆன்மீக கருத்துகளை பேசி இருக்கின்றது எனவும், பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான விடயங்களையும்,ஒழுக்கத்தையும், நெறிமுறைகளையும் திருக்குறள் போதிக்கின்றது எனவும் தெரிவித்தார்.
ஆராய்ச்சியாளர்கள் மொழிமாற்றம் செய்யும் போது அதன் உள் அர்த்தம் மாறுவதை தவிர்க்க வேண்டும் எனவும், ஆன்மீகம், பக்தி கொள்ள தனியாக காரணம் தேவையில்லை எனவும், நாம் எப்போதும் அறநெறிகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். திருக்குறள் ஆன்மீக கருத்துக்கள் நிறைந்தது எனவும் அதனை அரசியல் சித்தாந்தங்களுக்காகவும, நிர்பந்தங்களுக்காகவும் அதை சுருக்க கூடாது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu