பம்பரமாக சுழன்றால் வெற்றி நிச்சயம்- நூதன பிரச்சாரம்
அ.தி.மு.க. தொண்டர்கள் பம்பரமாக சுழன்று பணி செய்தால் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியமைக்க முடியும் என்பதை வலியுறுத்தி சாட்டையில்லாத பம்பரம் சுற்றி நூதன பிரச்சாரம் செய்யப்பட்டது.
காேயமுத்தூர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. அதிமுக ஆதரவாளரான இவர், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க.கூட்டணி வெற்றி பெற வேண்டி 234 பம்பரங்களை சாட்டையில்லாமல் தனது இரண்டு விரல்களால் சுற்றி நூதனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோவைபுதூரிலுள்ள ஒரு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வரிசையாக வைக்கப்பட்டிருந்த பம்பரங்களை தனது இரண்டு விரல்களால் லாவகமாக பிடித்து இரண்டு விரல்களால் வலது, இடது புறமாக சுழற்றி விட்டார்.
அ.தி.மு.க.தொண்டர்கள் பம்பரமாக சுழன்று பணி செய்தால் தமிழகம் முழுவதும் மீண்டும் அ.தி.மு.க.தலைமையில் வெற்றி கூட்டணியாக ஆட்சியமைக்க முடியும் என்பதை வலியுறுத்தி இந்த நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக ராஜா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu