கோவை அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்படும் சர்மிளா சந்திரசேகர் வேட்பு மனுத்தாக்கல்
சர்மிளா வேட்பு மனுத்தாக்கல்.
கோவை மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கியது. நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் பலரும் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 38 வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகரின் மனைவி சர்மிளா அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஊடகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற சர்மிளா, அதிமுக சார்பில் மேயர் பதவிக்கு முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ள வேட்பாளர் என்பது குறிப்பிடதக்கது. வேட்புமனு தாக்கலின் போது சர்மிளாவுடன் அவரது கணவர் சந்திரசேகரும், கட்சி நிர்வாகி ஒருவரும் உடன் சென்றனர்.
இதனைதொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்த பின் பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் சர்மிளா, கோவை மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை எனவும், அதிக வாக்கு வித்தியாசத்தில் இந்த வார்டில் வெற்றி பெறுவேன் எனவும், வார்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன் எனவும், பெண்களை மனதில் வைத்து நிறைய சமூக பணிகளை அறக்கட்டளை மூலம் செய்துள்ளதாகவும் மேயர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu