கோவை மாநகராட்சியில் அதிமுகவிற்கு முதல் வெற்றியை தந்த ஷர்மிளா சந்திரசேகர்

கோவை மாநகராட்சியில் அதிமுகவிற்கு முதல் வெற்றியை தந்த ஷர்மிளா சந்திரசேகர்
X

ஷர்மிளா சந்திரசேகர்.

தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்த போதும், வாக்கு எண்ணிக்கை முடிவில் 315 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கோவை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று வருகிறது. இதுவரை அறிவிக்கப்பட்ட 42 இடங்களில் 40 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக 30, சிபிஎம் 3, காங்கிரஸ் 3, கொமதேக 2, மதிமுக 1, சிபிஐ 1 ஆகிய இடங்களில் வென்றுள்ளது. இதேபோல அதிமுக 1, எஸ்.டி.பி.ஐ 1 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி கார்த்திகேயன் 7 வது வார்டில் தோல்வியை தழுவினார். இதனிடையே வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் பல மணி நேரம் அதிமுக ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் இருந்தது. இந்நிலையில் 37 வது வார்டில் போட்டியிட்ட ஷர்மிளா சந்திரசேகர் வெற்றி பெற்று, அதிமுகவிற்கு முதல் வெற்றியை தேடி தந்தார். தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்த போதும், வாக்கு எண்ணிக்கை முடிவில் 315 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்