ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் மீட்பு
மீட்கப்பட்ட விஜயாவின் உடல்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் அருகே ஒரத்திமலையில் இருந்து உருவாகும் பள்ள ஓடை, மத்திபாளையம் வழியாக, சென்னனுார் குட்டைக்கு செல்கிறது.
இப்பள்ளத்தில், கன மழையால், திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மத்திபாளையம், அம்பேத்கர் காலனியை சேர்ந்த விஜயா, 55 மற்றும் மூன்று பேர், நேற்று முன் தினம் தோட்ட வேலைக்குச் சென்று விட்டுத் திரும்பினர்.
அப்போது, ஓடையில் இறங்கி சாலைக்கு வரும் போது, மழை வெள்ளத்தில் விஜயா அடித்து செல்லப்பட்டார். உடனடியாக, அருகில் இருந்தவர்கள், தொண்டாமுத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் இரவு வரை தீயணைப்பு வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். போதிய வெளிச்சம் இல்லாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது. மீண்டும் நேற்று காலை முதல் பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது. ஓடை மற்றும் குட்டையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு தேடியும் பெண்ணின் உடல் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று காலை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு உடலை தேடும் பணி நடைபெற்றது. இரண்டு நாள் போராட்டத்திற்குப் பிறகு விஜயாவின் உடல் சென்னனூர் குட்டையில் இருந்து இன்று மீட்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu