/* */

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் பணியிடை நீக்கம்

பேராசிரியர் திருநாவுக்கரசு இளங்கலை பயிலும் மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசிய டெலிகிராம் ஸ்கிரீன் ஷாட் பதிவுகள் வெளியாகின.

HIGHLIGHTS

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் பணியிடை நீக்கம்
X

பேராசிரியர் திருநாவுக்கரசு.

கோவை பேரூர் பகுதியில் அரசு உதவி பெறும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திருநாவுக்கரசு இளங்கலை பயிலும் மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசிய டெலிகிராம் ஸ்கிரீன் ஷாட் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் "வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களா? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்! பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா? உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன் முகம் ரொம்ப அழகா இருக்கு, நீயும் நானும் இனி ரொம்ப கிளோஸ், நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும், சமைக்க பழகிக்கோ, தனியா இருக்க போர் அடிக்கலயா, நைட்டுக்கு நான் வரவா, வீட்ல அம்மா இருக்காங்க இல்லாதப்போ சொல்றன் நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது நெறயா பண்ணலாம் என இரவு 9.30 மணிக்கு மேல் பேராசிரியர் திருநாவுக்கரசு பேசுவது போன்ற பதிவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் யாராவது அருகில் இருக்கிறார்களா? என பேராசிரியர் திருநாவுக்கரசு கேட்பது போன்றும், அதற்கு அந்த மாணவி தன் அருகில் யாரும் இல்லை என்று கூறியவுடன், திருநாவுக்கரசு சட்டையைக் கழற்றி விட்டு உள்பனியனுடன் கட்டிலில் சாய்ந்த படி செல்ஃபீ எடுத்து அந்த மாணவிக்கு அனுப்பியதுடன், இதேபோல நீயும் போட்டோ எடுத்து அனுப்பு என்று கூறுவது போன்றும் ஸ்கிரீன் ஷாட்டில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து முன்னாள் மாணவர் அளித்த புகாரின் பேரில் இணைப் பேராசிரியர் திருநாவுக்கரசு பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த புகார் குறித்து விசாரணை செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி, முன்னாள் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 29 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்