1200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை

1200 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
X

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

வாடகைக்கு வீடு எடுத்து, யூடூப் பாரத்து கள்ளச் சாராயம் காய்ச்சி... போலீசில் சிக்கினர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த ஆலாந்துறை பகுதியில் சம்பத்குமார் என்பவரின் வீட்டில் சாராய ஊரல் போட்டு இருப்பதாக பேரூர் சரக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மதுவிலக்கு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த நபர்கள், காவல் துறையினரை பார்த்ததும் தலை தெறிக்க தப்பி ஓடி விட்டனர்.‌

இதையடுத்து சம்பத் குமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, 1200 லிட்டர் சாராயம் காயச்ச ஊரல் போடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த 10 லிட்டர் கள்ளச் சாராயம் , ஒரு ஸ்கார்பியோ கார், கேஸ் அடுப்பு, இரண்டு சிலிண்டர் , கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கள்ளச் சாராய ஊரலை காவல் துறையினர் அழித்தனர். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்திய போது போளுவாம்பட்டியை சேர்ந்த சம்பத் குமார் வாடகைக்கு வீடு எடுத்து, யூடூப் பாரத்து கள்ளச் சாராயம் காய்ச்சி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பத்குமார் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!