பேக்கரி கேசியரை அடித்து இழுத்து செல்லும் போலீசார்

பேக்கரி கேசியரை அடித்து இழுத்து செல்லும் போலீசார்
X
கோவையில் மீண்டும் அதிர்ச்சி, மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள உணவகத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது உதவி ஆய்வாளர் முத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் முத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இதேபோல இரவு நேரத்தில் பேக்கரியை மூடக்கோரி கேசியரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கும் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாலம் பகுதியில் பேக்கரியை மூடச்சொல்லி உதவி ஆய்வாளர், கேசியரை தாக்கி இழுத்துச் செல்லும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரொனா நடைமுறைகள் இல்லாத கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் பேக்கரியை மூடச்சொல்லிவிட்டு, குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ், பேக்கரி கேசியரை தாக்கி அடித்து இழுத்துச் சென்றுள்ளார்.

இரவு 11 மணி வரை பேக்கரி நடத்த அனுமதி இருந்தும், இப்படி நடந்து கொண்டது மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!