கல்வீசி தாக்கும் மர்மநபர்கள்: ஹெல்மட் அணிந்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

கல்வீசி தாக்கும் மர்மநபர்கள்: ஹெல்மட் அணிந்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
X

ஹெல்மட் அணிந்தபடி வாக்கு சேகரித்த பாஜகவினர்.

கோவை செல்வபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பாஜக வேட்பாளர் ஹெல்மட் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் 76 வது வார்டில் பாஜக சார்பில் கார்த்திக் என்பவர் போட்டியிடுகிறார். இவர் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்றிரவு அந்த வார்டு பகுதியில் கார்த்திக் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் முனீஸ்வரன் என்ற பாஜக தொண்டர் காயமடைந்தார். இது தொடர்பாக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவினருக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கூறி, பாஜக வேட்பாளர் கார்த்திக் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஹெல்மட் அணிந்தபடி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். பேரூர் மெயின் ரோடு சாஸ்தா நகர், முனியப்பன் நகர், பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் பாஜக தொண்டர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!