கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சமீரன் தகவல்
மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை சார்பில், சமூக வலுவூட்டல் முகாமில் உரையாற்றிய ஆட்சியர் சமீரன்
கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் சமூக நீதி அமைச்சகம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை சார்பில், சமூக வலுவூட்டல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு 88 மாற்றுத்திறனாளிகளுக்கு 73 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கினர்.
இதில் காது கேளாதோருக்கான கருவிகள், கேமிங் கிட், மாற்றுத்திறனாளிகளிக்கான மூன்று சக்கர வாகனம், ஆகியவை வழங்கப்பட்டன.இதில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக கருத்தரங்குகளும் விழிப்புணர்வு முகாம்களும் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் குறைந்தது இரண்டு இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது 1000 மாற்றுத்திறனாளிகள் பலனடைய தேவையான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும்.
மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இருக்க கூடிய மாணவர்களுக்கு ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாயும் ஆறிலிருந்து ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 2,000 ரூபாயும் ஒன்பதிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 3ஆம் ரூபாயும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க கடன் உதவியும் வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu