பூண்டி வெள்ளிங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
வெள்ளியங்கிரி மலைக்கு ஏறி செல்லும் அமைச்சர் சேகர் பாபு
கோவை மாவட்டம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதி பூண்டி வெள்ளிங்கிரி மலை உள்ளது. இங்கு சுயம்பு வடிவிலான சிவபெருமான் ஏழாவது மலையில் காட்சி அளிக்கிறார். அவரை தரிசிக்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சாமி தரிசனம் செய்ய ஜனவரி முதல் வாரத்திலிருந்து மே இறுதி வாரம் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம்
இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வெள்ளிங்கிரி மலை ஏற வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் மீண்டும் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. அதை தொடர்ந்து மீண்டும் பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.
இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அடிவாரப் பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மை ஆகியோரை வணங்கி ஆய்வு மேற்கொண்டு மலை ஏற துவங்கினார். இவருடன் பாதுகாப்பிற்காக வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு உடன் மேலும் அறநிலை துறை ஊழியர்கள் சிலர் உடன் சென்றனர்.
இவ்வாய்வின் போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்., இணை ஆணையர் செந்தில் வேலவன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் அவர்கள் கோயிலின் தேவைகள், பக்தரின் வசதிகள், அடிப்படை தேவைகள் குறித்தும், அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, பக்தர்கள் தங்கும் கூடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக வசதிகள் போன்றவை குறித்தும் பக்தர்கள் மற்றும் அலுவலரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் வெள்ளிங்கிரி மலைக்கு நடைபாதையாக சென்று மலைபாதைகளை பார்வையிட்டு வருகிறார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu