காேவையில் கொரோனா கவச உடை அணிந்து சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

காேவையில் கொரோனா கவச உடை அணிந்து சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
X

கொரோனா கவச உடை அணிந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த சக்திவேல்.

விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனபதை உணர்த்துவதற்காக பிபிஇ உடை அணிந்தபடி சென்று வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 வார்டில் சக்திவேல்(45) என்ற சுயேட்சை வேட்பாளர் போட்டியிட உள்ளார். நேற்று சக்திவேல் குனியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

கொரோனா கவச உடையான பிபிஇ உடை அணிந்தபடி சென்று சக்திவேல் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் மனுத் தாக்கல் செய்துள்ளார். முதலில் இவரது உடையை கண்டு அதிகாரிகள் வியப்படைந்த நிலையில் இவரின் விளக்கத்தை கேட்டப் பின் மனுவை பெற்று கொண்டனர்.

கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனபதை உணர்த்துவதற்காக பிபிஇ உடை அணிந்தபடி சென்று வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் பல்வேறு சேவைகளை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!