கல்வி துறை மூலமாக மாணவர்களின் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கோவைபுதூரில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார்.
உயர் கல்வி, மற்றும் பள்ளி கல்வி துறை மூலமாக மாணவர்களுக்கு விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கோவைபுதூரில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், விளையாட்டு வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கோவைபுதூர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பயன்படுத்துவதற்கான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு தற்காலிகமாக பயன்பட்டு வருகிறது.எதிர்காலத்தில் இந்த பகுதியில் இருக்கின்ற இளைஞர்கள் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில், மாலை நேரங்களில் நல்ல காற்றை சுவாசிக்க கூடிய குறுங்காடுகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறுங்காடு அமைக்கும்போது சுற்றுச்சூழல் துறை மூலம், மரக்கன்றுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்த அவர் கோவை நேரு ஸ்டேடியம் மற்றும் ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள டிராக்குகள் சேதமடைந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, நேரு ஸ்டேடியத்தில் டெண்டர் அறிவித்து, 6 கோடியே, 45 லட்சத்துக்கு புதிதாக சிந்தடிக் ட்ராக் போடுவதற்கு ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். மூன்று மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும், கழிப்பறை வசதியும் செய்து தரப்படும்.
ஆர்.எஸ் புரம் பகுதியில் காக்கி மைதானம் 5 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதில், 4 கோடியே 90 லட்சம் வீண் அடிக்க பட்டுள்ளது.அதற்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மைதானத்திற்கு அருகில் உயர் அழுத்த மின் கரண்ட் போய்க்கொண்டிருப்பதாகவும் அதை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு கோவையில் ஹாக்கி பிளேயர்ஸ் அதிகம் உள்ளதால் எதிர்காலத்தில் நல்ல காக்கி வீரர்கள் உருவாக்குபவர்களான மைதானம் அமைக்கும் பணிகளும் தொடங்கும்.
அரசு பள்ளி மாணவர்கள் பொருத்தவரை முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து 25 லட்சத்திற்கும் மேலான விளையாட்டு வீரர்கள் களத்தில் வந்துள்ளனர். முதலமைச்சர் விளையாட்டு துறைக்கு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளார். 110 விதியின் கீழ் சட்டமன்ற தொகுதியில், 3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் சென்னை நகரத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.4 ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் . அதிகமான விளையாட்டு மைதானங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒட்டுமொத்தமாக விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.உயர் கல்வி, மற்றும் பள்ளி கல்வி துறை மூலமாக மாணவர்களுக்கு விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல் 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu