சிறுவாணி அணையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு

சிறுவாணி அணையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நல்லூர் வயல் கிராமத்தில் அமைந்துள்ள நண்டங்கரை அணையை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், இன்று ஆய்வு மேற்கொண்டார். தடுப்பணை தூர் வாரும் பணியை சிறுதுளி அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. அங்கு உள்ள கிராவல் மண் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆலோசித்தார். இதைத்தொடர்ந்து கேரள மாநில எல்லையில் உள்ள, கோவையின் பிரதான குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையை, அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: நண்டங்கரை தடுப்பணை தூர்வாரும்போது, மண்களை எடுப்பதில் பிரச்சினை இருந்தது. தற்போது, அந்த மண்ணை விவசாயிகள் பயன்படுத்தவும், அவர்கள் பட்டா சிட்டா காண்பித்து எடுத்து பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்வராயபுரம், ஆலாந்துறை, பூலுவப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் தலா 15 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். சிறுவாணி அணையில் இருந்து கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. 50 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 25 அடி நீர் கொள்ளளவு உள்ளது என்றார்.
ஆய்வின்போது, கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu