மயக்கமடைந்த தொண்டர்- ஆசுவாசப்படுத்திய அமைச்சர்

மயக்கமடைந்த  தொண்டர்- ஆசுவாசப்படுத்திய அமைச்சர்
X

கோயமுத்தூர் தொண்டாமுத்தூர் தொகுதியில் மயக்கமடைந்த அதிமுக தொண்டரை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆசுவாசப்படுத்தினார்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கடந்த ஒரு வார காலமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். கிராமங்கள், நகர் பகுதி என தொடர்ச்சியாக நாள்தோறும் அமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதில் தொண்டாமுத்தூர் தொகுதி கரும்பு கடை அன்பு நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அமைச்சர் வாகனத்தின் முன்பு சென்று கொண்டிருந்த தொண்டர் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார்.

இதனை பார்த்த அமைச்சர் வேலுமணி பிரச்சார வேனில் இருந்து இறங்கி தொண்டரின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை ஆசுவாசப்படுத்தினார். பின்னர் தன்னுடன் வந்த காரில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரச்சாரத்தின் போது மயங்கிய நபர் ஆசாத் என்பதும் அதிமுக தொண்டரான இவர் அமைச்சர் வருகையையொட்டி அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story