தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த திமுக முயற்சி : வேலுமணி குற்றச்சாட்டு

தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை  நிறுத்த திமுக முயற்சி : வேலுமணி குற்றச்சாட்டு
X
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தலை நிறுத்த திமுக முயற்சி செய்கிறது. என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்ளாட்சி.துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டணி கட்சியினரிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை மாட்டு வியாபாரி, ரவுடி ஐபேக் நிறுவனத்தினர் 3 ஆயிரம் பேர் மற்றும் 3 ஆயிரம் ரவுடிகள் தொண்டாமுத்தூரில் இறக்கப்பட்டுள்ளனர். அதிமுகவினரிடம் வம்பிழுத்து பிரச்சனைகளை உருவாக்கி கலவரத்தை ஏற்படுத்த திமுக முயற்சி செய்கிறது. தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார். திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி ஒரு பொருட்டே அல்ல, அதிமுகவினர் பொறுமையாக இருக்க வேண்டும். குறுக்குவழியில் ஸ்டாலின் முதலமைச்சராவதை தடுத்தது, ஒபிஎஸ், இபிஎஸ் இணைத்தது, இரட்டை இலையை மீட்டது நான் தான் என்பதால் ஸ்டாலின் என் மீது கோபத்தில் உள்ளார் ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவன் நான் தான். சிறுபான்மையினர் பாதுகாப்பில் அதிமுக உறுதியாக இருக்கிறது, ஸ்டாலின் முதலமைச்சராக கூடாது இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags

Next Story
future ai robot technology