தாம்பூல தட்டில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர்

தாம்பூல தட்டில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர்
X

வாக்கு சேகரித்த ராதாகிருஷ்ணன்.

தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.

கோவை மாவட்டம் பேரூர் பேருராட்சியில் 7 வது வார்டில் தி.மு.க.சார்பாக ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் அந்த பகுதி மக்களிடையே நூதன முறையில்,வாக்கு சேகரித்து வருகிறார். தமிழக பாரம்பரிய முறைப்படி, சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பது போன்று, தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் தமிழகத்தில் பிரபலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே எனது வார்டு இருப்பதால் தமிழ் பாரம்பரிய முறைப்படி வாக்கு சேகரிப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!