கருப்பு துணியால் கண்களை கட்டி இருசக்கர வாகனத்தில் நூதன பிரச்சாரம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை குணியமுத்தூரை சேர்ந்த யு.எம்.டி.ராஜா விநோதமான முயற்சியாக அ.தி.மு.க.அரசின் சாதனைகள் மற்றும் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் படி, அவர் கண்களை கருப்புதுணியால் கட்டியபடி தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றபடி பிரச்சாரம் செய்து வருகிறார். முன்னதாக அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கண்களை திறந்தபடி கூட சாலையில் செல்ல முடியாதபடி சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமாக இருந்ததாகவும் ஆனால், அமைச்சர் வேலுமணி உள்ளாட்சி துறை பொறுப்பேற்ற பிறகு கோவை உட்பட தமிழகம் முழுவதும் சாலைகள் மட்டுமின்றி பல்வேறு கட்டமைப்புகள் மேம்படுத்தபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இந்த சாத்னைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறுவதற்காக தாம் இந்த நூதனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu