வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டைநாடுகளில், இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

கோவை குனியமுத்தூரில் பத்திரிகையாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டைநாடுகளில், இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. துர்கா பூஜை நாடு முழுவதும் சிறப்பாக இந்து மக்கள் கொண்டாடினார்கள். அதுபோல் அண்டை நாடான பங்களாதேஷில் துர்கா பூஜையில் ஈடுபட்டு வந்த இந்துக்கள் மீதும், இந்து ஆலயங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. 1947 ஆண்டு வரை இந்தியாவின் அங்கமாக இருந்து, பல பிரச்சினைகளுக்கு பிறகு தனிநாடாக அறிவிக்கப்பட்டது பங்களாதேஷ். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த பத்து நாட்களாக பெரும்பாலான இந்து வழிபாட்டு தளங்கள், குடியிருப்புகள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

அதுபோல் இலங்கையில் 2009, மற்றும் 2010, ஆண்டுகளுக்கு பிறகு இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது. 28 சதவிகிதம் இருந்த இந்துமக்கள் தொகை இன்று இலங்கையில் வெகுவாக குறைந்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட நாடுகளில் இந்துக்களின் கோவில்கள் மீதும், இந்துக்களின் மீதும் தொடர்ந்து நடைபெறும் தாக்குதலை கண்டித்து சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில், 27 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை புதிய தமிழகம் கட்சி நடத்த திட்டமிடுள்ளது.

இதில் புதிய தமிழகம் கட்சியின் ஒத்த கருத்துடன் உள்ள கட்சிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். எந்த மதசாயமும் வரக்கூடாது என்பதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒத்த கருத்துடைய எல்லா கட்சிகளும், அமைப்புகளும் கலந்துகொள்ளலாம் என்று அனைவரையும் அழைக்கின்றேன். பங்களாதேஷில் ஆயிரமாண்டுகளாக வாழ்ந்து வந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதில் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself