மின்வாரிய கடனுக்கு ஊழலே காரணம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள்.
கோவை குஜராத் சமாஜ் கட்டிடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுசெயலாளர் அருண் சிங் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், தூத்துக்குடியில் 4 சதவீத கமிசன் வாங்கிக் கொண்டு கான்டிராக்டர் பில் கிளியர் செய்யப்படுகின்றது. தூத்துக்குடியில் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள பில்கள் கேட்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி குறித்து குற்றச்சாட்டு சொன்ன பின்னர் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சொல்வதை போல, இந்த தகவலை கேட்டு இ-மெயில் அனுப்ப வேண்டும். சில கான்டிராக்டர்களுக்கு மட்டும் பில்கள் கிளியர் செய்யப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
1.59 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதற்கு தமிழக மின்வாரியத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம். தனியாரிடம் மின் கொள்முதல் செய்யப்பட்டது துவங்கி பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது தான் காரணம். அமைச்சர் செந்தில்பாலாஜி விஞ்ஞான முறையில் மறுகட்டமைப்பு செய்கிறார். பி.ஜி.ஆர் என்ற நிறுவனத்திற்கு அடுத்த கான்டிராக்ட் கொடுக்க இருக்கின்றனர். அதற்குதான் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றது. செந்தில் பாலாஜி போக்குவரத்துஊழல், வேலை வாங்கி தருவதாக ஊழல், மணல் ஊழல், இப்பொது மின்வாரிய ஊழல்.
ஒரு மனிதருடன் உட்கார்ந்து பேசும்போது தரம் இருக்கனும். தராதரம் இருக்கனும். நிச்சயமாக செந்தில் பாலாஜியை பதில் சொல்ல வைப்போம். திமுக எம்.பி. வில்சன் பி.ஜி.ஆர் எனர்ஜிக்கு நீதிமன்றத்தில் எதற்கு ஆஜராகின்றார். ஒரு புறம் மின்வாரியம் ஆஜராகின்றது. மறுபுறம் திமுக எம்.பி வழகறிஞராக ஆஜரகின்றார். பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்தை யார் வாங்க போகின்றார். நாங்கள் இதை சும்மா விடமாட்டோம். செந்தில் பாலாஜி வாயில் இருந்து பதில் வர வைப்போம்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வீட்டில், திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் ஹாஸ்டல் சமையலரை மூன்று வேலை சமைக்க வைக்கின்றனர். இது தொடர்பான நமக்கு சொன்ன பெண்ணின் ஆடியோ இருக்கிறது. அதை ரீலீஸ் செய்ய விரும்பவில்லை. ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் வீட்டில் சமைக்க வைப்பது தான் சமூக நீதியா? முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நேரில் தலையிட வேண்டும்.
தூத்துக்குடி சிபிசிஐடி எஸ்.பி மின்வாரிய கான்டிராக்டர்களிடம் நேரில் விசாரணை நடத்தி இருக்கின்றார். முதல்வர் செந்தில் பாலாஜி விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கிறார். தினமும் ஒவ்வொரு விவகாரமாக வெளியிடுவோம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu