எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு; ரூ.13 லட்சம் பறிமுதல்

எஸ்.பி.வேலுமணி வீட்டில்  லஞ்ச ஒழிப்புத்துறை  சோதனை நிறைவு; ரூ.13 லட்சம் பறிமுதல்
X

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிக்கப்பட்ட போலீசார்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈட்டனர். இதில் ரூ.13 லட்சம் மற்றும் ஆவுணங்கள் பறிமுதல்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018 ம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை 6.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையை துவக்கினர். 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பாக திரண்டனர். இந்த சோதனை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வடவள்ளி பகுதியில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ், நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவடைந்தது. எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 மணி நேரம் நடந்த சோதனையில் பாதுகாப்பு பெட்டக சாவி தவிர வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிச் சென்றனர்.

இதனிடையே லஞ்ச ஒழிப்பு துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதில் 13 லட்ச ரூபாய் பணம், ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story