கோவை: சிப்பாய்கள் புடைசூழ ராஜா வேடத்தில் வந்து சுயேட்சை மனுதாக்கல்

கோவை: சிப்பாய்கள் புடைசூழ ராஜா வேடத்தில் வந்து சுயேட்சை மனுதாக்கல்
X

சேவகர்களுடன் ராஜா வேடமணிந்து வந்த வேட்பாளர் நூர் முகமது.

தற்போது 38 முறையாக சுந்தராபுரம் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக, நூர் முகமது 94வது வார்டில் போட்டியிடுகிறார்.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நூர் முகம்மது. இவர் இதுவரை சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் என 37 முறை போட்டியிட்டு உள்ளார். தற்போது 38 முறையாக சுந்தராபுரம் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக 94வது வார்டில் போட்டியிடுகிறார்.

இதற்காக இவர் ராஜா வேடமணிந்து சிப்பாய்கள் 2 பேருடன், தள்ளுவண்டியில் வந்து, கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தள்ளுவண்டியில் ராஜா வேடமணிந்து வந்த போது அங்கிருந்த பொதுமக்கள் இவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். மக்களுக்காகப் பணி செய்யவே சுயேச்சையாக போட்டியிடுவதாகவும், தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய உள்ளதாகவும் நூர் முகமது தெரிவித்தார்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு