மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
X

முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய காட்சி.

ஜெயலட்சுமி (82) கோவை வடவள்ளி பகுதியில் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் சகோதாரான மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி (82) கோவை வடவள்ளி பகுதியில் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இது குறித்து தகவல் அறிந்ததும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் கோவை வடவள்ளியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த ஜெயலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது மு.க.தமிழரசு, துர்கா ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, ராஜகண்ணப்பன், முத்துச்சாமி, பெரியகருப்பன், காந்தி, வெள்ளகோவில் சாமிநாதன், மெய்யநாதன், கீதா ஜீவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்