எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக போராட்டம்: 10 அதிமுக எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு

எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக போராட்டம்: 10 அதிமுக எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு
X

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் போராட்டம்

எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக அதிமுக எம்எல்ஏக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 13 இலட்ச ரூபாய் பணம், 2 கோடி ரூபாய்க்கான வைப்புத்தொகை ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் இலஞ்ச ஒழிப்பு துறையினர் 11 மணி நேரம் சோதனை நடத்தினர்.

இதனிடையே எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பாக கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன், கவுண்டம்பாளையம் எம்எல்ஏபி.ஆர்.ஜி. அருண்குமார், கிணத்துக்கடவு எம்எல்ஏசெ.தாமோதரன், சூலூர் எம்எல்ஏகந்தசாமி, மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, சிங்காநல்லூர் எம்எல்ஏ கே.ஆர். ஜெயராம், பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம். ஆனந்தன், மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் முகாமிட்டனர். அதிமுக தொண்டர்கள் இலஞ்ச ஒழிப்பு துறை சோதனையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் உட்பட 200 பேர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், சட்ட விரோதமாக கூடி போராட்டம் நடத்தியது, ஊரடங்கு உத்தரவை மீறியது, தொற்று நோயை பரப்பும் வகையில் செயல்பட்டது ஆகிய 3 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!