பொதுமக்களுக்கு தேவையான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்கின்றனர் - அமைச்சர் நாசர்

பொதுமக்களுக்கு தேவையான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்கின்றனர் - அமைச்சர் நாசர்
X

கோவையில் இன்று   பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார்

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காக அதிகாரிகள் பந்தய குதிரை வேகத்தில் செயல்படுகின்றனர் என அமைச்சர் நாசர் கூறினார்

கோவையில் இன்று அதிகாலையில் பாலகங்களில் பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். புலியகுளம் பாலகம், காந்திபுரம் நடமாடும் ஆவின் பாலகம், ஆர்.எஸ்.புரம், பொன்னைய ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பாலின் தரத்தை சோதனை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறி தொகுப்புகள், பழங்கள், தண்ணீர், மருத்துவம், மருத்துவ உபகரணங்கள், பால் உள்ளிட்டவைகள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரை பந்தய குதிரை வேகத்தில் செயல்படுகின்றனர்.

கொரோனா என்ற சங்கிலி தொடரை அறுத்தெரிய வேண்டும் என்பதற்காக இந்த முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கின்ற வேளையில், பொதுமக்களுக்கு தேவையான இந்த அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த காய்கறி தொகுப்புகள், பால் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு சரியானபடி செல்வது தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார்.

சென்னையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று கோவை திருப்பூரிலும், நாளை தென் மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்வதாகவும், கோவையில் ஆவின் சிறப்பாக செயல்படுவதாக கூறினார். தொடர்ந்து, பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பிளாண்டை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் நாகராஜ், பால்வளத்துறை ஆணையாளர் நந்தகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!