உணவகம் மீது தாக்குதல்: கோவையில் 3 பேர் கைது

கைதானவர்கள்
கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் உணவகத்தில் பிரதீப்(22) என்ற அதே பகுதியை சேர்ந்த இளைஞர், நேற்று முன்தினம் சாப்பிடச் சென்றார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர், 520 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு, ரூ. 500 மட்டும் கொடுத்துள்ளார்.
அப்போது, மீதி 20 ரூபாய் கேட்ட கடை காசாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பின்னர் அவர், உணவகம் மூடப்படும் நேரத்தில், மேலும் சில இளைஞர்களுடன் வந்து காலி மதுபாட்டில்களை வீசி, உணகவம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காசாளர் பழனிச்சாமிக்கு காயம் ஏற்பட்டது. உணவக ஊழியர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து காசாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரதீப்(22), ஸ்ரீகிருஷ்ணேஷ்வரன்(21), அஜித் குமார்(22) ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 6 நபர்களை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu