கோவையில் அர்ஜூன் சம்பத் கைது

கோவையில் அர்ஜூன் சம்பத் கைது
X

சாலை மறியல் போராட்டத்தில் அர்ஜூன் சம்பத்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரித்து சாலை மறியலில் ஈடுபட்ட அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் இருந்த பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக இடிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து, தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில், கட்சியினர் அங்காளம்மன் படத்தை வைத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து, தடாகம் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அர்ஜூன் சம்பத், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தாங்கள் வரவேற்பதாகவும், அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், ஆனால் அதற்காக பழமை வாய்ந்த இக்கோவிலைப் இடித்ததால் தங்களது ஆன்மீக நோக்கம் புண்பட்டிருப்பதாக கூறினார். மேலும் இடிக்கப்பட்ட கோவில் அமைந்திருந்த இடத்தில் சிறு அளவிளாவது மீண்டும் கோவிலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story