மாஜி அமைச்சரை கண்டித்து சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர்- கோவையில் பரபரப்பு

மாஜி அமைச்சரை கண்டித்து சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர்- கோவையில் பரபரப்பு
X

நத்தம் விஸ்வநாதனை கண்டித்து, கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து, சசிகலா ஆதரவாளர்கள் கோவையில் போஸ்டர்களை ஒட்டியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்களில் ஒருவரும், நத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விசுவநாதன், கடந்த சில தினங்களுக்கு முன்னர், சசிகலா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில் அவர், சசிகலாவை வேஸ்ட் லக்கேஜ் என்றும் தாய் அல்ல பேய் எனவும் சாடியிருந்தார். சசிகலா குறித்த நத்தம் விஸ்வநாதனின் விமர்சனம், சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், கோவை நகரின் பல்வேறு பகுதிகளில், நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக கோவை ரயில் நிலையம், உக்கடம் ஆத்துப்பாலம் உட்பட நகரின் பல்வேறு இடங்களில் அமமுக சார்பில், இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளில் சசிகலா குறித்து அவதூறாக பேசியதை கண்டிப்பதாக, சசிகலா புகைப்படத்துடன் அமமுகவினர் சுவரொட்டிகளை ஓட்டியுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!