அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு
X
பேரூர் சட்டமன்ற தொகுதியில் 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.ராஜூ.

கோவை மாவட்டம் பேரூர் சட்டமன்ற தொகுதியில் 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.ராஜூ. 64 வயதான இவர் ஆவின் சேர்மனாக இருந்தார். மேலும் அதிமுக கோவை மாநகர் மாவட்ட அவைத்தலைவராகவும் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் கே.பி.ராஜூ உயிரிழந்தார். இது அதிமுகவினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!