ஆடி முதல் தினம் -மக்கள் வருகையின்றி வெறிச்சோடிய பேரூர் படித்துறை

ஆடி முதல் தினம் -மக்கள் வருகையின்றி வெறிச்சோடிய பேரூர் படித்துறை
X

ஆடி முதல் நாள் முன்னோர் தர்ப்பணம்

ஆடி முதல்நாளான இன்று, கொரோனா கட்டுப்பாட்டால், கோவை பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய குறைந்தளவே பொதுமக்கள் வந்தனர்.

முக்தி தலம் என்று அழைக்கப்படும் கோவை பேரூரில், புகழ்பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நொய்யல் ஆற்றில் படித்துறை உள்ளது. இங்கு, முன்னோர்களுக்கு திதி கொடுப்பது விசேசமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் நாள், ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு போன்ற நாட்களில் இந்த படித்துறையில் திதி கொடுக்க ஏராளமானவர்கள் வருவதுண்டு.

கடந்தாண்டு கொரோனா பொது முடக்கத்தால், பேரூர் படித்துறையில் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு நாளில், பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையிலும், மக்களின் வருகை மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது.

கொரோனா காரணமாக கூட்டத்தை தவிர்த்து 5 நபர்கள் மட்டுமே திதி கொடுக்க அனுமதிக்கப்படுவதுடன், சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு, தர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எனினும் இது தொடர்பான தகவல் பலருக்கும் தெரியாததால், மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததாக சொல்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!