கோவையில் பக்கத்து வீட்டு முதியவர் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது

கோவையில் பக்கத்து வீட்டு முதியவர் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட வீரமணி.

கோவையில் பக்கத்து வீட்டு முதியவர் மீது ஆசிட் வீசிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் அடுத்த சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். டி.வி.யில் சத்தத்தை அதிகமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் வீரமணி (30) என்பவர் முதியவரின் வீட்டிற்குள் புகுந்து டி.வி.யின் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார்.

இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வீரமணி தனது வீட்டில் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்தஆசிட்டை எடுத்து சம்பத் முகத்தில் வீசியுள்ளார். ஆசிட் முகத்தில் பட்டதை அடுத்து சம்பத் அலறி துடித்துள்ளார். இதில் அவரது முகத்தில் வாய் மற்றும் கண் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து சம்பத் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story