தொண்டமுத்தூர் திமுக வேட்பாளரை ஆதரித்து டெல்லி விவசாயி பிரசாரம்

தொண்டமுத்தூர் திமுக வேட்பாளரை  ஆதரித்து டெல்லி விவசாயி பிரசாரம்
X
தொண்டமுத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சிவசேனாபதியை ஆதரித்து டெல்லி விவசாயி பிரசாரம் செய்தார்.



தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகின்றார். குனியமுத்தூர் பகுதி உட்பட்ட சுண்டாக்காமுத்தூர் சாலை, திருநாள் நகர் பகுதியில், நடைபெற்ற பிரச்சாரத்தில், திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேசுகையில், "ஊழல் செய்து கோடியில் புரளும் வேலுமணி, வேட்பு மனுவில் அவரது சொத்தை மறைத்து காட்டியுள்ளார்.

அவரது மகன் வெளிநாட்டில் ஹலிகாப்டரில் வலம் வருகின்றார். சாதாரணமாக இருந்த வேலுமணிக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது. மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து சேர்த்த பணம் தான் அது. அவர் மக்களை ஏமாற்றி வருகின்றார்.

அவர் ஜாபவான் இல்லை. நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா? என சவால் விட்டேன். ஓடி போய் ஒழிந்து விட்டார் வேலுமணி. கொள்ளையடிப்பதில் எடப்பாடியையும் மிஞ்சி விட்டார், வேலுமணி. சிஏஏவிற்கு ஆதரவு தெரிவித்த வேலுமணி நமக்கு தேவையா? கொள்ளையடித்த வேலுமணி நமக்கு தேவையா?" என கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்காக போராடிய டில்லி விவசாயி கோல்டன் பாபா ராஜ்விந்தர் சிங், "விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் திமுகவிற்கு, வாக்களியுங்கள். திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி வெற்றி பெற உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்" என்று கேட்டு பிரசாரம் செய்தார்.



Tags

Next Story
ai in future agriculture