வாக்காளர்களுக்கு வழங்க 5 கோடி பதுக்கல்? திமுக போராட்டம்
கோயமுத்தூரில் மாநகராட்சி பொறியாளர் இல்லத்தில் வாக்காளர்களுக்கு வழங்க 5 கோடி ரூபாய் பதுக்கியதாக கூறப்படும் நிலையில் இது குறித்து அறிந்த திமுகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன் இல்லத்தில், வாக்காளர்களுக்கு வழங்க 5 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திமுகவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏராளமான திமுகவினர் மற்றும் வழக்கறிஞர்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் மற்றும் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் தேர்தல் அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்தால் மட்டும் தான் சோதனை நடத்துவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் 4 மணி நேரம் தாமதமாக தேர்தல் அலுவலர் நள்ளிரவு 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பிறகு, வீட்டிற்குள் சென்று 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu