வாக்கு சேகரிக்க போலீஸ் இடையூறு - திமுக வேட்பாளர் புகார்

வாக்கு சேகரிக்க போலீஸ் இடையூறு - திமுக வேட்பாளர் புகார்
X

கோவை,தொண்டாமுத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிக்க போலீசார் இடையூறு செய்வதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி புகார் தெரிவித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து, திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார். இந்நிலையில் பேஸ்புக் வாயிலாக வாக்கு சேகரிக்க போலீசார் இடையூறு செய்வதாக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இன்று தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீடு இருக்கக்கூடிய குனியமுத்தூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. 3 கேமராக்கள், 40 போலீசார் பின்தொடர்ந்து வந்து வாக்கு சேகரிக்கும் இடங்களில் இடையூறு அளிப்பதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!