ஒரு ஆம்லேட்க்கு இரண்டு இலைகள் கேட்டு தகராறு - 3 மாணவர்கள் மீது வழக்கு
கோவை மாவட்டத்தில் ஒரு ஆம்லெட்டுக்கு 2 இலைகள் கேட்டு தகராறு செய்ததாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் நரசிபுரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் ஆலந்துறை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த குமார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று 3 இளைஞர்கள் குடிபோதையில் உணவகத்துக்கு சாப்பிட வந்துள்ளனர்.
அப்போது ஒரு ஆம்லெட் ஆர்டர் செய்துவிட்டு இரண்டு இலை வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஒரு ஆம்லெட்டுக்கு 2 இலைகள் தரமுடியாது என உணவக ஊழியர் குமார் கூறியதால் ஆத்திரமடைந்த மூவரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியதோடு அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதுகுறித்து உணவக ஊழியர் குமார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் செம்மேடு பகுதியைச் சேர்ந்த மூவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் நரசிபுரம் பகுதியிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பிரவீன் (19), விக்னேஷ் (20), ரமேஷ் (20) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மூவர் மீதும் 2இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu