ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது - தமிழிசை சௌந்தரராஜன்

ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது - தமிழிசை சௌந்தரராஜன்
X
ஆன்மிகத்தையும்,தமிழையும் பிரிக்கமுடியாது,எந்த நிகழ்வுக்கு சென்றாலும் ஒரு பக்திமானக தான் செல்கிறேன்-தமிழிசை சௌந்தரராஜன்

ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது, எந்த ஒரு பக்தி நிகழ்வுக்கு சென்றாலும் ஒரு பக்திமானக தான் செல்கிறேன், ஆளுநராக அல்ல என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கறுப்பை மட்டுமே பேசுபவர்கள் தற்போது காவிகளையும் பற்றி பேச துவங்கியிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பேரூர் ஆதீனத்தில் முப்பெரும் விழாவிழாவில் கலந்துகொண்டு பேசிய தெலுங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது. எந்த ஒரு பக்தி நிகழ்வுக்கு சென்றாலும் ஒரு பக்திமானக தான் செல்கிறேன், ஆளுநராக அல்ல. கறுப்பை மட்டுமே பேசுபவர்கள் தற்போது காவிகளையும் பற்றி பேச துவங்கியிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

காவி ஆன்மிகத்தை குறிக்கிறது. தமிழகத்தில் காவி பெரியது, வலியது. சாமியார்கள் அணியும் காவி, தேசிய கொடியில் உள்ள காவி என எல்லா காவியையும் தான் சொல்கிறேன் என சிறப்புரை ஆற்றிய தமிழிசை, ஆளுநர்கள் எல்லாம் ஆளுமை மிக்கவர்கள் தான், சாதாரண மக்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் ஆளுநருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்றும் ஒரு சில நேரங்களில் தேவைகளுக்கேற்ப சில முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!