நாளை மறுநாள் முதல் கோவை-சென்னை இடையே அதிநவீன வசதிகளுடன் சிறப்பு ரெயில்

நாளை மறுநாள் முதல் கோவை-சென்னை இடையே அதிநவீன வசதிகளுடன் சிறப்பு ரெயில்
X

 கோவை-சென்னை இடையே அதிநவீன வசதிகளுடன் சிறப்பு ரெயில்

ஞாயிற்றுக்கிழமை முதல் கோவை-சென்னை இடையே அதிநவீன வசதிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது-சேலம் தெற்கு ரெயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்

நாளை மறுநாள் முதல் கோவை-சென்னை இடையே அதிநவீன வசதிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கம்- சேலம் தெற்கு ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு அதிநவீன வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த பயண அனுபவம் வழங்கக் கூடிய (எல்.எச்.பி.) சிறப்பு ரெயில் (02675) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

இதேபோல் மறுமார்க்கமாக கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் (02676) நாளை மறுநாள் முதல் இயக்கப்படுகிறது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future