கொரோனா விதிமீறல்: ஸ்பாவிற்கு சீல் வைத்து கோவை மாநகராட்சி அதிரடி

கொரோனா விதிமீறல்: ஸ்பாவிற்கு சீல் வைத்து  கோவை மாநகராட்சி அதிரடி
X

கோவை பாரதி பார்க் பகுதியில், விதிமுறைகளை மீறிய ஸ்பாவிற்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.

கோவை பாரதி பார்க் பகுதியில், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட ஸ்பாவிற்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை மாவட்டம் கொரொனா தொற்று பரவலில் தொடர்ந்து தமிழக அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. தொடர் நடவடிக்கைகள் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு 4000 மாக இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 1500 க்கு கீழ் வந்துள்ளது.

எனினும் தமிழக அளவில் ஒப்பிடும் போது கொரோனா பாதிப்புகள் அதிகம் என்பதால் , கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றது.

இந்நிலையில் கோவை பாரதி பார்க் பகுதியில் செயல்பட்டு வரும் "கீரின் டே ஸ்பா " கொரொனா விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அழகு நிலையத்திற்கு சீல் வைத்தனர். அந்த அழகு நிலைய நிறுவனத்திற்கு 25 ஆயிரம் அபராதமும் மாநகராட்சி அதிகாரிகள் விதித்தனர். கொரொனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கோவை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!