சமூகப் பொறுப்புடன் தொண்டு செய்த ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி

சமூகப் பொறுப்புடன் தொண்டு செய்த ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி
X

தனித்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள். 

மாணவர்களுக்கு சமூக பொறுப்பினையும், உதவும் மனப்பான்மையும் வளர்க்கவேண்டும் என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பழனியம்மாள் ஆலோசனைப்படி, கல்லூரி பேராசிரியர்கள் தங்கள் மாணவ மாணவிகளை கோவை சௌரிபாலயத்தில் உள்ள "ஆல் தி சில்ரன் பார் கேர்ள்ஸ்" என்னும் குழந்தைகள் இல்லத்திற்கு சனிக்கிழமை (12.03.2022) அழைத்துச் சென்றனர்.

சமுதாய பொறுப்பின் ஒரு அங்கமாக அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளின் அன்றாட தேவைகளுக்காக கல்லூரி உறுப்பினர்களின் நன்கொடையாக பலசரக்கு மற்றும் மளிகை பொருள்களை வழங்கினர். மேலும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக சில வகுப்புகளையும் அவர்களின் தனி திறனை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளையும் நடத்தி, அவர்களை ஊக்கப்படுத்தி இனிப்புகள், எழுதுபொருட்கள் உட்பட பரிசுகளையும் வழங்கினர்.

கல்லூரியின் சார்பாக தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர் ஸ்ரீஜித் விக்னேஷ்பாபு, நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மற்றும் துணை பேராசிரியர் கோபி ஆகியோர் கலந்து கொண்டு பலசரக்கு, மளிகை பொருட்களை ஆல் தி சில்ரன் பார் கேர்ள்ஸ் இல்லத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் சமூக சேவகரான ஈஸ்வரனிடம் வழங்கினர்.

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்திற்கும், கல்லூரி முதல்வருக்கும், பேராசிரியர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் குழந்தைகள் இல்லத்தின் சார்பாக ஈஸ்வரன் நன்றியினை தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!