Minister Treatment Central Govt Help அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை மோசம் மத்திய அரசின் உதவியை நாட அழைப்பு
பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. (கோப்பு படம்).
Minister Treatment Central Govt Help
கோவை ராமநாதபுரத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் நம்பிக்கையோடு பாஜகவை பார்ப்பதற்கான நல்ல சூழல் உருவாகி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு வகைகளில் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் மீது எப்போது ரைடு வரும் என்று எதிர்பார்த்து வருவதால் அரசாங்க வேலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.
தமிழகத்தில் அரசாங்கம் ஒரு முடிவெடுக்கிறது. அதன் பிறகு மாநிலத்தின் முதல்வர் இன்னொரு முடிவு எடுக்கிறார். பிறகு முன்னர் எடுத்த முடிவை மாற்றுகிறார்கள். ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விவகாரத்தில் தமிழக அரசு யூ டர்ன் அரசாங்கம் என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது.
தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் சொல்கிறார். மக்களுக்கு பால் கொடுப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், விவசாயிகளிடம் பால் வாங்குவதை ஏன் குறைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு எந்த பதிலும் கிடையாது. குறிப்பாக பாஜக இந்த விவகாரத்தை எடுத்தால் மாநில தலைவர் மீது தரக்குறைவான விமர்சனத்தை அமைச்சர் வைக்கிறார்.
தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவதை அமைச்சர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். பிரச்னைக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவது அரசியல் அநாகரீகம். அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை அடிக்கடி மோசமாகி கொண்டிருப்பது மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.
ஒருவேளை சிறைத்துறை அவரை சரியாக கவனிக்கவில்லையா? என தெரியவில்லை. ஒரு அமைச்சரை கூட சிறைச்சாலையில் சரியான உணவு மற்றும் மருத்துவ வசதியோ இல்லாததன் காரணமாகத்தான் அவருக்கு உடல்நிலை மோசமாகி வருவதாக எங்களுக்கு தகவல் வருகிறது.
ஒருவேளை அவருக்கு தமிழக அரசு சிறந்த மருத்துவத்தையோ உடல் நலத்தையோ கவனிக்க முடியாவிட்டால் அவர்கள் மத்திய அரசின் உதவி நாடலாம். எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை வைத்து கூட மருத்துவர்களை அனுப்பி வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கலாம் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu