விளையாட்டுத்துறையில் 25 லட்சம் இளைஞர்களை ஈடுபடுத்த அரசு திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

விளையாட்டுத்துறையில் 25 லட்சம் இளைஞர்களை  ஈடுபடுத்த அரசு திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்
X

ஆர்எஸ் புரத்தில் உருவாக்கப்பட்டு வரும் ஹாக்கி மைதானத்தை, அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில், 25 லட்சம் இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் ஹாக்கி மைதானத்தை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தவும், புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தவும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹாக்கி ஸ்டேடியம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்கி ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வது முதலமைச்சரின் கனவுத்திட்டமாக உள்ளது. இதற்கான தொலைநோக்குத் திட்டம் தயார் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் 25 லட்சம் இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிரது.

விளையாட்டுத்துறைக்கு வரும் புதிய இளைஞர்களுக்கு ஊக்குவித்து தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படும். சென்னையில் ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. வருவாய் ஈட்டும் துறையாக விளையாட்டுத்துறை மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!