கள்ளக்காதலியுடன் சேர்ந்து மிரட்டும் கணவர்: பெண் ஆசிரியர் போலீசில் புகார்

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மிரட்டும் கணவர்: பெண் ஆசிரியர் போலீசில் புகார்
X
பைல் படம்
கோவையில் கணவர், கள்ளக்காதலியுடன் சேர்ந்து மிரட்டி வருவதாக பெண் ஆசிரியர் போலீசில் புகார் அளித்தார்.

கணவர் கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொண்டு தொடர்ந்து மிரட்டி வருவதாக பெண் ஆசிரியர் கோவை போலீசில் புகார் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (39). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் அவர் கூறியதாவது. எனக்கும், கோவை கணபதிவரதராஜூலு நகர் பகுதியை சேர்ந்த பிளக்ஸ் பேனர் தயாரிக்கும் கடை வைத்திருக்கும் பிரதீப்கு மார் (43) என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டில் திருமணம் நடந்தது. எங்களுக்கு 16 வயதில் மகன் உள்ளார்.

என் கணவர் என்னிடம் அடிக்கடிவாக்குவாதம், தகராறு செய்து வந்தார். நான் என் கணவரிடம் இருந்து பிரிந்து என் பெற்றோர் வீட் டிற்கு சென்று விட்டேன்.

இந்நிலையில் என் கணவர் கோவையை சேர்ந்தபெண் ஒருவருடன் கள்ளத்தொ டர்பு வைத்திருப்பதாக தெரியவந்தது. இவர் அந்த பெண்ணுடன் சுற்றிய விவ ரமும் எனக்கு தெரியவந்தது. நான் என் கணவரிடம் இது தொடர்பாக கேட்டேன். அவர் விவாகரத்து கேட்டு என்னை மிரட்டினார்.

நான் விவாகரத்து தர மறுத்துவிட்டேன். ஆனால் அவர் தனது கள்ளக்காதலி மற்றும் அவரது பெற்றோருடன் சேர்ந்து என்னை அடிக்கடி மிரட்டி வருகிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த புகாரில் அவர் தெரிவித் துள்ளார்.

கோவை மகளிர் போலீசார் இது தொடர்பாக பள்ளி ஆசிரியையின் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!