கோவை மாநகராட்சி சிறுவர் பூங்கா: அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
ஒண்டிப்புதூரில், சிறுவர் விளையாட்டு பூங்காவை, அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
கோவை மாநகராட்சி சார்பில் ஒண்டிப்புதூர் பகுதியில் 10 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அப்போது அமைச்சர் மெய்நாதன் பேசுகையில், வெள்ளலூர் குப்பை கிடங்கில் 50 ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட குப்பைகள் உள்ளது. இவற்றை தொழில்நுட்ப வகையில் பயன்படுத்த முந்தைய அரசு தவறி விட்டது. 650 ஏக்கரில் உள்ள அந்த குப்பைகளை நவீன தொழில்நுட்பத்துடன் விவசாய உரத்திற்கு பயன்படுத்தவும், அடர் வனப்பகுதியாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும், நேரு விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும். ஆர்எஸ் புரத்தில் உள்ள ஹாக்கி மைதானம், தற்போது, ரூ 19.80 லட்சம் ரூபாயில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானமாக உருவாக்கப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu