டெங்கு ஹாட்ஸ்பாட் ஆகும் கோவை? கொரோனாவும் அதிகரிப்பதால் கவலை
கோவையை, ஒருபுறம் கொரோனா பாதிப்பும், மறுபுறம் டெங்கு காய்ச்சலும் அச்சுறுத்தி வருகிறது. கோவையில் 37 இடங்கள் டெங்கு ஹாட்ஸ்பாட் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழில் நகரான கோவையில், ஒருபுறம் கொரோனாவும், மறுபுறம் டெங்கு பரவலும் அச்சுறுத்தி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை இருவர் டெங்குவுக்கு பலியாகி உள்ளனர். அதில் ஒருவர், திருப்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி, மற்றொருவர் அன்னூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் ஆவார்.
இதுதவிர, சுகாதாரத்துறை தகவலின்படி, கோவை அரசு மருத்துவமனையில் 13 சிறுவர்கள், 19 பெரியவர்கள் என மொத்தமாக 32 பேர் டெங்கு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 பேர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, நகரில் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவையில் மட்டும் 37 இடங்கள் டெங்கு ஹாட்ஸ்பாட் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. டெங்குவை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்டம் முழுவதும் 2,000 ஊழியர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவையில் கொரோனா தாக்கமும் அதிகரித்து வருகிறது. கடந்த பல நாட்களாளக் தினசரி கொரோனா பாதிப்பு நூற்றுக்கும் கீழே இருந்து வந்த நிலையில், சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை, 100-ஐ கடந்து வருகிறது. இதையடுத்து, கோவை கொடீசிரியா வளாகத்தில், சிறப்பு கொரோனா வார்டு அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கோவையில் கொரோனா தொற்று மற்றும், டெங்கு பரவல் அதிகரித்து வருவது, அருகில் உள்ள திருப்பூர், நீலகிரி மாவட்ட மக்களிடமும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu