கொரோனா தடுப்புப் பணிகள்: கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கொரோனா தடுப்புப் பணிகள்: கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
X

காளப்பட்டி மாநகராட்சி பள்ளியில் ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு

கொரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

கோவை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 54 வது வார்டில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், ஆக்சிஜன் அளவை சோதனை செய்யும் களப்பணியாளர்கள், பரிசோதனை விவரங்களை கோவிட் 19 கள ஆய்வு பதிவேடுகளில் பதிவிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து 72 வது வார்டில் நடந்த தூய்மைப் பணிகளை அவர் பார்வையிட்டார். இதேபோல காளப்பட்டி மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா