கோவை மண்டல போக்குவரத்துத்துறை ஆணையரிடம் ரூ.28 லட்சம் பறிமுதல்

கோவை மண்டல போக்குவரத்துத்துறை ஆணையரிடம்   ரூ.28 லட்சம் பறிமுதல்
X
கோவை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்­பூர், நீல­கிரி, கோவை ஆகிய நான்கு மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய கோவை மண்­டல வட்­டார போக்­கு­வ­ரத்து இணை ஆணை­ய­ராக இருப்பவர் உமா­சக்தி. இவர் இம்­மா­வட்­டங்­க­ளைச் சேர்ந்த பேருந்து உரி­மை­யா­ளர்­கள், சுங்­கச்­சா­வடி அதி­கா­ரி­கள் உட்­பட பல­ரி­டம் மாதந்­தோ­றும் லஞ்­சம் வசூ­லித்து வந்­ததாக தெரிகிறது.

இது­கு­றித்து கோவை காவல்­துறை­யின் லஞ்ச ஒழிப்புப் பிரி­வுக்கு தொடர் புகார்­கள் வந்­தன. இதை­ய­டுத்து அவர் மீது நட­வ­டிக்கை எடுக்க முடி­வு செய்யப்பட்டது. இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் காலை வழக்­கம்­போல் மாதாந்­திர லஞ்­சப் பணத்தை வசூ­லித்த இணை ஆணை­யர் உமா­சக்தி, கோவை சவு­ரி­பா­ளை­யம் பகு­தி­யில் தன் காரில் சென்றுகொண்­டி­ருப்­ப­தாக லஞ்ச ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து அங்கு விரைந்து சென்ற அதி­கா­ரி­கள், காரை தடுத்து நிறுத்தி, சோதனை மேற்­கொண்­ட­னர். இத­னால் உமா­சக்தி கடும் அதிர்ச்சி அடைந்­தார். சோத­னை­யின்­போது காரில் கட்­டுக்­கட்­டாக அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த லஞ்­சப் பணத்தை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்து, உமா­சக்­தி­யை­யும் அவ­ருக்கு உத­வி­க­ர­மாக செயல்­பட்ட ஓய்­வு­பெற்ற காவ­லர் செல்­வ­ராஜ் என்­ப­வ­ரை­யும் கைது செய்­த­னர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!